English tamil

அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் - வரலாறு வளர்ச்சி
அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் - வரலாறு வளர்ச்சிஅருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் பூமி பூஜை செய்து 23.1.1997ல் துவக்கப்பட்டது.

நோக்கம் :தூய்மையான ஆன்மிகத்தை பரப்புதல், அறிவு பூர்வமாக பக்தி வளர்த்தல், இது தொடர்பான சமூக பணிகள் ஆற்றுதல், சமூக நற்சிந்தனைகளை ஏற்படுத்துதல், மத மன நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.


நோக்கங்களை அடைய மேற்கொண்ட முயற்சி, செயல்முடிவு :

தூய்மையான ஆன்மிகத்தைப் பரப்புதல்:

 1. கோவில் அமைக்க 23. 1. 1997 பூமி பூஜை நடந்தேறியது. மாரியம்மன் சன்னதி அமைக்க கட்டுமான வேலைகள் துவக்கப்பட்டன.1998 - 99 ஆண்டுகளில் ஸ்ரீ நர்த்தன கணபதி சன்னதி, ஸ்ரீ புவனேஸ்வரி சன்னதிகள் அமைக்கப்பட்டன.
 2. 2000-ல் மாரியம்மன் மகா மண்டபம் கட்டப்பட்டது.
 3. 2000 -2001 ஆண்டுகளில் ஸ்ரீ புவனேஸ்வரர் சன்னதியும், ஸ்ரீ சந்தான பரமே°வரர் சன்னதி, ஸ்ரீ எல்லைக்காளி அம்மன் சன்னதி, ஸ்ரீ கருப்பணசுவாமி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 4. 28-1 -2002ல் (தை மி 15) ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய பிரமுகர்களான நீதியரசர் திரு.மாசிலாமணி, காந்தி கிராம பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வி பங்கஜம், நாடாளுமன்ற, சட்டமன்ற மதுரை மாநகராட்சி தலைவர் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சுமார் 50,000 பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நல்ல உணவு வழங்கப்பட்டது.
 5. 2004-ல் ஸ்ரீ புவனேஸ்வரர் சன்னதி மண்டபம், ஸ்ரீ சந்தான பரமே°வரர் சன்னதி, ஸ்ரீ எல்லைக்காளி சன்னதி, ஸ்ரீ கருப்பணசுவாமி சன்னதி அனைத்தும் கான்கிரிட் கட்டங்களாக மாற்றப்பட்டு புதுபிக்கப்பட்டது.
 6. 2005ல் அனைத்து புதுப்பிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
 7. 2008ல் இராஜ கோபுரம் கட்ட பூமி பூஜை நடந்தது.

அறிவு பூர்வமாக பக்தி வளர்த்தல் :

 1. ஒவ்வொரு வருடமும் சுமார் 500 குழந்தைகளுக்கு “விஜயதசமி” அன்று நோட்டு புத்தகங்கள் வழங்குதல் நடைபெற்று வருகிறது.
 2. அருள் வரம் பெற்ற மகான்களின் நல் ஆசியும், பெரியோர்களின் வாழ்த்துகளும் குழந்தைகள், இளஞ்சிறார்கள் எதிர்காலத்தை வளமாக்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன்படி ஸ்ரீலஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் ஒவ்வொரு விஜயதசமி அன்றும் சிறு குழந்தைகளுக்கு நாக்குதனில் சூலாயுதம் கொண்டு அட்சரம் எழுதுகின்றார்கள்.
  இது இக்கோவிலின், எங்கும் காணப்படாத தனிச்சிறப்பு.அவ்வாறு எழுதப்பெற்ற குழந்தைகள் இன்று மிகப் பிரபலமாக இருக்கின்றார்கள் என்பது பயனடைந்தவர்கள் கூற்று.
 3. ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் அமைதி சந்தோவும். நிறைவு அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கூட்டுப் பிரார்த்தனை, தியானம் ஆகியவை அருள்மிகு மாரியம்மன் கோவில் நிறுவுனர் ஸ்ரீ லஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் தலைமையில் ஆன்மீக உணர்வோடு நடைபெற்று வருகிறது.
 4. சமய சமூக விழிப்புணர்வு குறித்த சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 5. ஞானத்தின் சிறப்புகளை அடைய, மானுடத்தின் உயர்நிலை அடைய நாடி, வந்தவர்களுக்கு குண்டலினி தீட்சைதனை ஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் அளித்து வருகிறார்கள்.

சமூகப் பணிகள் ஆற்றுதல் :

 1. 9.11.97 அன்று இந்திய சுதந்திர பொன்விழாச் கொண்டாடப்பட்டது. பல்வேறு துறையைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு `சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு.ஆளுடைய பிள்ளை, காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. மார்க்கண்டன், உலக சமாதன ஆலயத் தலைவர் திரு. பரஞ்சோதியார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 2. 1998ல் திரு. பழனிவேல்ராஜன் தலைமையில் சுமார் 500 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டன.
 3. 1997, 98, 99 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 பெண்களுக்கு இலவச சேலைகள், சட்டைகள் வழங்கப்பட்டன.
 4. ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தன்றும், தைப்பூச விழா அன்றும் சுமார் 1000 முதல் 2000 நபர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
 5. சிவராம கணேசன் - 7 வயது இளம் கலைஞர் பாராட்டு விழா 1999 ல் நடத்தப்பட்டது.
 6. 2006ம் ஆண்டு ஆலயமுகப்பில் கலையழகு மிக்க தோரணவாயில் திறக்கப்பட்டது.

சமூக நற்சிந்தனைகளை ஏற்படுத்துதல் :

 1. மதங்களை மறப்போம் ! மனித ஒற்றுமையை வளர்ப்போம் என்ற சிந்தனையை ஏற்படுத்த, மேம்படச் செய்ய, மத நல்லிணக்க விழா 10. 2. 98 அன்று கொண்டாடப்பட்டது. மதுரை முன்னாள் மேயர் (துணை) திரு. சோ. நவநீ தகிருஷ்ணன், அவ்வை ஜானகி மருத்துவமனை தலைவர் திரு. சங்கர ராம், உலக சமாதான ஆலயத் தலைவர் திரு. பரஞ்சோதியார் முதலானோர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர்.
 2. 12.2.99 அன்று மத நல்லிணக்க விழா நடைபெற்றது. மேதகு பேராசிரியர் சாலிகு (மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர்), டாக்டர் ஜேக்கப் செரியன் (பத்மபூஷண்Ćவிருதுćபெற்றவர்), சையது காஜா மைதீன் (அரசு டவுண் காஜியார்) திரு. பரஞ்சோதியார் (உலக சமாதான ஆலயத் தலைவர்), வணக்கத்திற்குரிய மதுரை ஆதினம் அவர்கள் சிறப்பித்தனர்.
 3. 21 .1.2000ல் மத நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது. நீதிஅரசர் திரு. சௌந்தர பாண்டியன், வில்லியம் பூபாள ஜோசப் (மலேசியா ) மற்றும் மலேசியா நார்வே நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 4. கார்கில் யுத்த முடிவுக்கு மௌன விரதம் : ஸ்ஆப்கானி°தானில் கந்தகாரில் இந்திய விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்ட போதும், கார்கில் யுத்தம் அமைதியுடன் முடிய காலை 7.30 மணிமுதல் யுத்தம் முடிவு அறிவிக்கும் வரை மௌன விரதம் 500 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. அன்று மாலையிலேயே யுத்த முடிவு அறிவிக்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருந்தது .
 5. மக்கள் மகிழ்ச்சியும், அமைதி, நிறைவும் அடைய ஒவ்வொரு மாதமும் கூட்டுப்பிரார்த்தனை தியானம், அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் நிறுவுனர் ஸ்ரீ லஸ்ரீ சுவாமி சக்தி அடிமை அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 6. சமய சமூகம் குறித்த சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குண்டலினி தீட்சை சுவாமி சக்தி அடிமை அவர்களால் அளிக்கப்படுகிறது.